வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று வியாழக்கிழமை 57 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் பத்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.சஞ்ஜீவ் தெரிவித்தார்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் தொடர்ச்சியாக பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்ற நிலையில் நேரடி தொடர்பை ஏற்படுத்திய 57 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் பத்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஏழு பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.சஞ்ஜீவ் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment