இலங்கையில் ஏற்பட்ட மோசமான நிலையின் பின்னணியிலுள்ள பெண் யார்?



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
லங்கையில் கொவிட் வைரஸ் தொற்று தீவிரமைடைந்தடைந்த போதிலும் ஜோதிடரின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை முடக்காமல் இருந்தார் என பிரபல ஊடகமான கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அனுராதாபுரத்தில் உள்ள பிரபல ஜோதிடரான ஞானக்க என்பவர், அவரது நம்பிக்கைக்குரியவராகியுள்ளார்.

தீய சக்திகளை விரட்டுவதற்கான ஆலோசனை பெறுவதற்கும் பூஜைகளுக்காகவும், ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் ஜனாதிபதி அனுராதபுரத்திற்கு பயணம் மேற்கொள்கிறார் என குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஜோதிடரின் ஆலோசனைக்கமையவே ஜனாதிபதி முக்கிய தீர்மானங்கள் அனைத்தையும் எடுப்பார் என தெரியவந்துள்ளது. அவ்வாறான ஆலோசனைக்கமைய ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் கடுமையாக பாதித்துள்ளன.

நாட்டிற்கு மஞ்சள் இறக்குமதி செய்வதனை தடை செய்யும் நடவடிக்கை உட்பட இந்த பெண் ஜோதிடரின் முடிவிற்கமைய எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அனைத்து மருத்துவ பிரிவினர்களின் ஆலோசனைகளையும் மீறி ஜோதிடர் ஞானக்காவின் ஆலோசனைக்கமைய கண்டி பெரஹரவை நடந்தும் தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்தார் என கூறப்படுகின்றது.

கண்டி பெரஹரவை பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்ற போதிலும் இந்த நிகழ்வில் 5,000 கலைஞர்கள் மற்றும் துணை ஊழியர்கள் உள்ளனர். மேலும் நேரடி ஒளிபரப்பிற்காக ஊடகக் குழுக்களும் இணைந்துள்ளன. நாட்டை முடக்குவது தொடர்பில் அண்மையில் நடந்த பிரதான கலந்துரையாடலில் ஜனாதிபதி எடுத்த தீர்மானங்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

“நாங்கள் இலகுவாக முடிவுகளை எடுக்கவில்லை, ”என்று ஜனாதிபதி கோட்டாபய இந்த சந்திப்பில் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “இது மற்ற நாடுகளைப் போல் இல்லை, கண்டி பெரஹர இலங்கையின் ஜாதகத்தின்படி பொது மக்களின் பங்கேற்புடன் நடத்தப்பட வேண்டும்” என ஞான மேனியோ கூறுகிறார்.

பெரஹர இதுவரை சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பெரஹர நடத்தப்படாவிட்டால், தீய சக்திகள் என்னை பாதிக்கும் என கூறப்படுகிறது, நாட்டின் தலைவராக, நான் பலியாகிவிடுவேன். பெரஹர காரணமாக, அனைத்து கொரோனா மரணங்களும் காளி தேவியின் தியாகங்களாக கருதப்படும். நாட்டின் எதிர்கால நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக அவர்கள் தங்களை தியாகம் செய்திருக்கின்றார்கள்” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பரவலின் போது நாட்டை முடக்க தாமதம் ஏற்பட்டதற்கு இதுவே உண்மையான காரணம் என்று பிரதமருக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :