பொதுமுடக்கம் காரணமாக கிளினிக் மருந்துகள் தபாலகமூடாக விநியோகம் ! மருந்தகங்கள் திறந்துள்ளன !!



நூருல் ஹுதா உமர்-
நாட்டில் நேற்றிரவு 10 மணிமுதல் அமுலுக்கு வந்துள்ள பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை எழுந்துள்ளது. இதனால் நீண்டகால நோய்வாய்ப்பட்டோர், கிளினிக் மூலம் மருந்துகளை பெறுவோரின் நன்மைகருதி தபால் திணைக்கள தபாலகங்கள் ஊடக மருந்துகள் விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் தபால் திணைக்கள கடுகதி சேவையும் இடம்பெற்று வருகின்றது.

அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மக்கள் முழுமையாக கடைப்பிடித்து வருகின்றனர். இன்று 21 காலையில் பிரதான நகரங்கள் உட்பட கரையோர பிரதேசங்களில் உள்ள முக்கிய கேந்திர ஸ்தானங்கள் மற்றும் வீதிகள் அனைத்தும் முற்றாக வெறிச்சோடி காணப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மதித்து மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளதுடன் அத்தியவசிய சேவை வழமைபோன்று இயங்கிவருவதுடன் மருந்தகங்கள் திறந்துள்ளதை காண முடிகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :