J.f.காமிலா பேகம்-
மாநகர அபிவிருத்தி, கடலோரப் பாதுகாப்பு தொடர்பிலான இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவாவின் சில அதிகாரங்கள் பறிக்கப்படப் போவதாக தகவல் கிடைத்துள்ளது.
கடந்த வாரம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவின் அமைச்சுப் பொறுப்புக்கள் மற்றும் அதிகாரங்களை ஜனாதிபதி கைப்பற்ற செய்தி கிடைத்தது.
அவ்வாறே ஜனாதிபதி, கடந்த வாரத்தில் அமைச்சர் சரத் வீரசேகரவின் இரண்டு விடயங்களை மீளத்தன்வசப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவாவின் சில பொறுப்புக்களை அரசாங்கத்தின் உயர்பீடம் மீளப் பொறுப்பேற்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
கடந்த சில வாரங்களாக இராஜாங்க அமைச்சரது செயற்பாடுகள் மற்றும் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் அரச உயர்பீடத்திற்குப் பல முறைப்பாடுகள் சென்றிருப்பதே இதற்கான காரணம் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.
ReplyForward
0 comments :
Post a Comment