நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-
அதிபர் ஆசியர்களின் கொடுப்பனவை வழங்கக்கோரியும் சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலத்தை மாற்றியமைக்க கோரியும் அட்டன் நகரில் ஆர்பாட்ட பேரணி யொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆசிரியர் சங்கங்களும் சிவில் அமைப்புகளும் இணைந்து 05.08.2021 காலை பத்து புட்சிட்டிக்கருகிலிருந்து இலவச கல்வியை இல்லாதொழிக்காதே என்ற வாசகம் பதித்த சவப்பெட்டியை ஏந்தியவாறு ஆரம்பமாகிய பேரணி நகரின் பிரதான வீதியூடாக மணிக்கூண்டு கோபுரம் வரை வந்து ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைகழகத்தின் சட்ட மூலத்தினை இந்த அரசாங்கம் மாற்றியமைக்க முற்படுவதினை எம்மால் ஏற்று கொள்ள முடியாது இந்த நாட்டில் அதிபர் ஆசிரியர்களின் கொடுப்பனவை வழங்கவேண்டும் என ஆர்பாட்டத்தில் ஈடுட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
0 comments :
Post a Comment