தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர் சம்பளத்தை அதிகரிப்பது சாத்தியமில்லை



சிரியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தற்போதைய சூழ்நிலையில் முடியாது என்பதே அரசாங்கத்தில் நிலைப்பாடாகுமென்று கல்வி அமைச்சரினால் இன்று ஆசிரியர் சங்கங்களுக்கு அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரண, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர், அதிபர் சம்பளக் கொடுப்பனவு, அரச ஊழியர்களின் நெருக்கடி என்பன பற்றி அடுத்த வரவு - செலவுத்திட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

அரசியல் ரீதியாக வீழ்ச்சி கண்டவர்கள் ஆசிரியர், அதிபர் நெருக்கடியை பாலமாக பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். குறுகிய நோக்கங்களுக்காக ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

கொரோனா வைரஸ் பரவலினால் சகல நாடுகளும் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளை போன்று இலங்கையும் சிரமங்களை எதிர்நோக்குவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான நாடுகள் ஊழியர்களுக்கான சம்பளத்தை 50 சதவீதத்தால் குறைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டிமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :