அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டிலுள்ள அறுபத்தி ஒன்பது இலட்சம் மக்கள் பாரிய இன்னல்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான இந்த அரசை வெற்றி பெறச் செய்தனர். இதில் சுமார் நான்கு லட்சம் முஸ்லிம் தமிழ் வாக்குகளாகும்.
இந்த அரசை ஆட்சிக்கு கொண்டுவர பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத சிறு கட்சிகள் பலவும் அயராது மேற்கொண்ட முயற்சியினால் மாபெரும் வெற்றி இந்த அரசுக்கு கிடைத்தது.
மேலும் இந்த வெற்றியில் முதன் முதலாக பொதுஜன பெரமுனவுடன் கூட்டு ஒப்பந்தம் செய்த முஸ்லிம் கட்சி எமது ஐக்கிய காங்கிரஸ் கட்சியாகும்.
கொரோனா பிரச்சின காணப்பட்ட போதும் அரசு நிறைய அபிவிருத்தி பணிகளை செய்து வருகின்ற நிலையிலும் நிர்வாக ரீதியான சில சிக்கல்களை ஊடகங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றன.
சில அமைச்சர்கள் பங்காளிக் கட்சிகளுக்கு மத்தியிலும் பிளவுகள் இருப்பதாக அறிய முடிகிறது என்பது கவலையான விடயமாகும்.
அண்மையில் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு வழங்க அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டது. அதை சிலர் துஷ்பிரயோகம் செய்ததால் அரசு அவற்றை உடனடியாக இடைநிறுத்தம் செய்ததை அறியமுடிகின்றது.
இந்த ஒரு லட்சம் தொழில்வாய்ப்பை அரச தரப்பு எம்பீக்களுக்கும் அரசுக்கு ஆதரவான கட்சிகளுக்கும் வழங்கி அவர்களின் சிபாரிசுக்கடிதம் மூலம் நியமனங்களை வழங்கியிருந்தால் கண்டவர்களும் இதில் ஊழல் செய்ததை தவிர்த்திருக்கலாம்.
ஆகவே பொதுஜன பெரமுனவும், கௌரவ ஜனாதிபதியும் தம்முடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இணைந்து ஆதரவளித்த பங்காளி கட்சிகளுடன் கலந்தாலோசனைகளை செய்து வந்திருந்தால் அவர்களிடமிருந்து நல்ல கருத்துக்களை பெற்றிருக்க முடியும். நாட்டின் எந்த நிர்வாகத்தையும் சரியாக கொண்டு செல்வதற்கு கட்டாயம் கூட்டுக்கட்சிகளின் ஆதரவும் தேவை. அவர்களே இதனை அரசியலாக்கி மக்களின் செல்வாக்கை அரசுக்கு தக்க வைப்பார்களே தவிர வெறுமனே நிர்வாகிகளால் அரசுக்கு ஆதரவான மக்கள் சக்தியை கட்டிஎழுப்ப முடியாது.
எனவே அரசின் அபிவிருத்தி, கொரோனா ஒழிப்பு சார்ந்த அனைத்து கலந்துரையாடல்களும் நடக்கும் வகையில் அரசுக்கு ஆதரவு அளிக்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உள்ள, இல்லாத கட்சித் தலைமைகளை அழைத்து ஆலோசனை நிறுவனம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு ஒரு நிர்வாகக் குழு அமைத்தால் அரசின் நிர்வாகத்தை சிறந்த முறையில் மக்கள் மத்தியில் அரசியல் மயப்படுத்துவதன் மூலம் அறுபத்தொன்பது லட்ச வாகுகளையும் மீண்டும் தக்க வைத்து மேலும் வாக்குகளை அதிகரிக்க முடியும் என்று குறிப்பிடுள்ளார்.

0 comments :
Post a Comment