வெளிவராத இரகசியங்கள் அடங்கிய கடிதம் பாப்பரசருக்கு !



J.f.காமிலா பேகம்-
ஸ்டர் தாக்குதல் குறித்து இதுவரை அம்பலப்படுத்தப்படாத சில முக்கிய விடயங்கள் பற்றிய கடிதமொன்று பாப்பரசருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையினால் இந்தக் கடிதம் மிகவிரைவில் பாப்பரசருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் ஆயர் இல்ல வட்டாரங்கள் கூறுகின்றன.

அத்துடன் ஈஸ்டர் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகத்திற்கு முன்பாக உதவிகோருவதாகவும் கர்தினால் கொழும்பில் நேற்று முன்தினம் (13) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகள் மந்தகதியில் நடத்தப்படுவதாகவும், நீதியை விரைவில் பெற்றுத்தர வேண்டும் என்பதையும் வலியுறுத்தி எதிர்வரும் 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில் கறுப்புக் கொடிப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை கடந்த 13 திகதி தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :