எனது இரண்டு மாத சம்பளங்களை கொவிட் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன் - பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான்.



னது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை முழுதுமாக கொவிட் நிவாரண நிதிக்கு வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்துள்ளார். நேற்று 22 ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலின் காரணமாக நாளுக்கு நாள் தொற்றாளர்கள் அதிகரித்து செல்வதோடு, உயிரிழப்புக்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இவற்றை தடுக்கும் வகையில் அரசு தன்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், நாட்டின் நிலைமையினை கருத்திற்கொண்டு மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்வதில் அக்கறையோடு செயல்படவேண்டும்.

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது, ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பாக வீடுகளிலேயே இருப்பது, அத்தியவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே செல்வது போன்ற சுய பாதுகாப்பு விடயத்தில் மக்கள் மிக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


ஊடகப்பிரிவு
பா.உ.இஷாக் ரஹுமான்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :