சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உள்ளூர் சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் நேற்று இரவுநடைபெற்ற அமைச்சரவைக்க்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக இன்று (18) நடைபெற்ற அமைச்சவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
15. பாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் அரிசி இறக்குமதி செய்தல்
தற்போது சந்தையில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக பாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் காணப்படும் ஏற்பாடுகளை பின்பற்றி துரிதமாக 6,000 மெட்ரிக்டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments :
Post a Comment