எனது நீண்ட கால நண்பரும் அன்பான மனிதர் எல்லோரிடமும் பண்பாகப் பேசும் குணம் கொண்ட வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய அதிபர் என்.எம்.ஹஸ்ஸாலி (சேர்) இன்று காலை மரணித்து விட்ட செய்தி கேள்விப்பட்டு மிகவும் கவலை அடைந்தேன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன்
வாழைச்சேனை பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளில் முன்னின்று உழைத்தவர்களில் மர்ஹூம் N.M.ஹஸ்ஸாலி அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. வை. அஹமட் வித்தியாலயத்தின் அதிபராக இருந்த காலப்பகுதியில் அப்பாடசாலையின் பௌதீக வளத்தேவைகளை பெற்றுக் கொள்வதிலும் மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தினை அதிகரிக்க செய்வதிலும் முன்னின்று உழைத்தவர்.
தனது பாடசாலை தேவைகள் தொடர்பில் அரசியல் வாதிகளோடு மிகவும் நெருக்கமாக இணைந்து செயற்பட்டவர் அவருடைய இழப்பு கல்விப்புலத்தில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்
அன்னாருடைய மறுமை வாழ்வு சிறப்பாக அமைந்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனற உயர்ந்த சுவர்க்கம் கிடைக்க வேண்டும் என அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.மேலும் அவரது மரணத்தினால் கவலையுற்றி இருக்கும் அன்னாருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் மன அமைதியை இறைவன் வழங்க பிரார்த்திக்கின்றேன்.
0 comments :
Post a Comment