கொரோனாப்பீதியால் சுயமாகவே போக்குவரத்தை குறைத்துவரும் பொதுமக்கள்!



வி.ரி.சகாதேவராஜா-
ம்பாறை மாவட்டத்தில் ,தொடரும் கொரோனாப்பீதியால் பொதுமக்கள் சுயமாகவே பொதுப்போக்குவரத்தை குறைத்துவருகிறார்கள். வீதிகளில் வாகனப்போக்குவரத்து குறைந்துவருகின்றது. பஸ்களில் ஓரிருவரையே காணமுடிகின்றது.

ஊரடங்குச்சட்டம் பற்றி, பொதுமக்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மாறாக அவர்களாகவே அடங்கி முடங்கிவிடுவதைக்காணக்கூடியதாயுள்ளது. ஊரடங்கு விடயத்தைவிட விலைவாசி ஏற்றமே பேசுபொருளாக அவர்கள் மத்தியில் நிலவுகிறது.

பால்மா ,காஷ் போன்றவற்றை சற்றும் காண முடியாத நிலை. மேலும், சீனியின்விலை 160ருவாவுக்கு மேல் எகிறிச்செல்கிறது. ஏனைய அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றம் பற்றியே மக்கள் தமக்குள் பொதுவாக பேசிக்கொள்கிறார்கள்.

அண்மைக்காலமாக ,அம்பாறை மாவட்டத்தில் கொரோனாத்தொற்று படுவேகமாக பரவிவருகிறது.தினம்தினம் தொற்றாளர்களின் எண்ணிக்கை மோசமாக அதிகரித்துவருகிறது. மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

கல்முனைப்பிராந்தியத்தைவிட அம்பாறைப்பிராந்திய நிலைமை நாளுக்கு நாள் படுமோசமாக மாறிவருகிறது.நேற்று முன்தினம் இடம்பெற்ற டிசிசி கூட்டத்திலும் இதுவிடயம் பேசப்பட்டது.

பெரும்பாலானவர்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் சுயமுடக்கத்தைக்கடைப்பிடித்து வருகிறார்கள். அவசியமாக வெளியே சென்றாலும் மறுகணம் வீடுதிரும்பிவிடுகிறார்கள்.

மொத்தத்தில், இனம்புரியாத ஓர் அமைதிநிலை நிலவுகிறது. புயலுக்கு முந்திய அமைதியா? என்ற நியாயமான அச்சமும் நிலவுகின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :