அறிகுறியற்ற கோவிட் நோயாளர்களை( asymptomatic patients ) வீட்டிலேயே சிக்கல்கள் இல்லாமல் வைத்திருப்பதற்கான சிகிச்சை முறை நேற்று (09) முதல் ஆரம்பமாகியது.
இதுவரைகாலமும் மேல் மாகாணத்தில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இந்த "Home based management for asymptomatic patients" முறை நேற்றுமுதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிகுறியற்ற கோவிட் நோயாளர்களை, இதுவரைகாலமும் பாதுகாப்பாக அருகிலுள்ள இடைத்தங்கல் நிலையங்களுக்குஅனுப்பப்பட்டு அங்கு 10நாட்கள் சகலவசதிகளுடனும் பராமரிக்கப்பட்டு, மீளவும் வீட்டிற்கு அனுப்ப்பட்டுவந்தனர். அந்நடைமுறை விலக்கிக்கொள்ளப்பட்டு, இனிமேல் வீட்டில்வைத்து சிகிச்சையளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் , 2 முதல் 65 வயதிற்குட்பட்ட நபர்கள் அவர்களுக்கு தென்படும் அறிகுறிகளுக்கு அமைய மருத்துவ மேற்பார்வையின் கீழ் வீட்டில் சிகிச்சை வழங்கப்படும்.
இலங்கையில் கடுமையான சுகாதார நெருக்கடி உருவாகி வருவதாகவும் , எதிர்வரும் நாட்களில் மற்றும் வாரங்களில் அதிக கோவிட் தொற்றாளர்கள் எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத்தின் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அறிகுறியற்றவர்கள் உடனடியாக தங்கள் பகுதி பொது சுகாதார அதிகாரி அல்லது மருத்துவ அதிகாரியைத் தொடர்பு கொண்டு தம்மை வீட்டிற்குள்ளேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர்.
ஒரு பொது சுகாதார அதிகாரி அல்லது மருத்துவ அதிகாரி நோயாளியுடன் தொடர்பு கொள்ளும் போது நோயாளிக்கு ஒரு தெளிவான தொலைபேசி இணைப்பு ஒரு மொபைல் சாதனம் இருக்கிறதா? என்று ஆராய்வார்கள்.
இந்த விடயங்கள் சரியென உறுதிப்படுத்தப்பட்டால், நோயாளி வீட்டிலேயே தனிமைப்படுத்த ஒப்புதல் வழங்கப்படும்.
எந்த நேரத்திலும் நோயாளிக்கு அறிகுறிகள் தோன்றினால் அவர்கள் படுக்கை வசதி உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள்.
இலங்கையில் நாள்தோறும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் வைத்தியசாலைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிசிஆர் அல்லது ஆன்டிஜன் பரிசோதனைக்குப் பிறகு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பின் ,நோயாளர்கள் மருத்துவ அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும், மருத்துவ அதிகாரிகளால் வழங்கப்படும் சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் நோயாளர்களுக்கு வீட்டில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் தொலைபேசி மூலம் பதிவு செய்த பிறகு நோயாளர்கள் மருத்துவ அதிகாரிகளின் மேற்பார்வையில் வைக்கப்படுவார் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள 1390 என்ற எண் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment