பொது நிர்வாக அமைச்சில் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றி வந்த மருதமுனையை சேர்ந்த பல்துறை ஆளுமையாளரான இலங்கை திட்டமிடல் சேவை விசேட தரத்தை உடைய எஸ்.அன்வர்தீன் மீண்டும் அம்பாறை மாவட்ட செயலகத்தில் தன்னுடைய கையெழுத்தை இட்டார்.
அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிவந்த இவர் கடந்த பல மாதங்களுக்கு முன்னர் பொது நிர்வாக அமைச்சில் பணிப்பாளர் நாயகமாக கடமையேற்றார். தனது சுகயீனத்தை காரணமாக முன்வைத்து இலங்கை பொதுசேவை ஆணைக்குழுவுக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே இவர் இவ்வாறு அம்பாறைக்கு சுகயீன விடுதலையில் தற்காலியமாக இடமாற்றலாகி வந்துள்ளதுடன் இதுவரை எவ்வித பொறுப்புக்களும் அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தினாலோ அல்லது உள்நாட்டலுவல்கள் அமைச்சினாலோ வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை காலமும் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக இருந்துவந்த பாக்கியராஜா அவர்களே இப்போதும் தொடர்ந்தும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றி வருகிறார். இது தொடர்பிலான சகல விபரங்களும் பொது, உள்நாட்டு விவகார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது விசேட அம்சமாகும்.

0 comments :
Post a Comment