தொற்றுக்குள்ளான சிறுவர்களுக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கும் நடைமுறை ஆரம்பம்



ரண்டு வயதுக்கு மேற்பட்ட கொவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கும் நடைமுறை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், எந்தவித நோய் அறிகுறிகளும் வெளிப்படாத அல்லது சிறிதளவு நோய் அறிகுறிகள் காணப்படுகின்ற குழந்தைகள் வீட்டிலிருந்தவாறே சிகிச்சை பெறுவதற்கு பரிந்துரைக்கலாம், இந்த சிகிச்சை முறைக்கு உட்படுத்தப்படும் குழந்தைகளுக்கு நீண்டகால நோய்கள் அல்லது நீண்டகாலத்திற்கு சிகிச்சையளிக்க வேண்டிய நோய்கள் இருக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும், வீட்டிலிருந்தவாறே சிகிச்சை அளிக்கும் போது குழந்தையைப் பராமரிக்க பெரியவர் ஒருவர் வீட்டில் இருக்க வேண்டும். தொலைபேசியின் ஊடாக சிகிச்சை பரிந்துரைக்கப்படுவதால் அதற்குரிய வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றும் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்தார்.

மேலே குறிப்பிட்ட விடயங்களை பின்பற்றும் கொவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்கள் தொடர்பாக அப்பகுதியின் சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்புகொண்டு அந்த வசதியைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

அத்துடன் சிறுவர்களுக்கு வீட்டிலிருந்தே சிகிச்சை அளித்தல் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு 1390 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அதனூடாக தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

கொவிட் வைரஸ் நோய் என்பது பெரும்பாலான குழந்தைகளுக்கு ஒரு பொதுவான வைரஸ் நிலை என்றும் அது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு மூலம் தானாகவே குணமடைகிறது என்றும் வைத்தியர் சன்ன டி சில்வா குறிப்பிட்டார்

கொவிட் தொற்றுக்குள்ளான குழந்தைகளை வீட்டில் வைத்து பராமரிக்கும் போது, மருந்துகளை விட அவர்கள் மீது கவனம் செலுத்துவது முக்கியம் என்றும், குழந்தைக்கு கொவிட் தொடர்பான சிக்கல் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்

இதேவேளை வைத்தியர்களின் பரிந்துரை இன்றி குழந்தைகளுக்கு மருந்துகளை வழங்குவது தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :