கறுப்புக்கொடி போராட்டம்



ஹஸ்பர் ஏ ஹலீம்-
2019 .04. 21 ஆம் திகதிய உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கிரிஸ்தவ மக்களுக்கு எதுவித நீதியும் இதுவரை கிடைக்கவில்லை, உண்மையான சூத்திரதாரிகள் மறைக்கப் படுகிறார்கள், அக் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப் பட வேண்டும், அவர்களே தண்டிக்கப் பட வேண்டும் என பல நிபந்தனைகளை முன்வைத்து கிறிஸ்தவ மேற் சபைகளினால் 2021.08.21ந் திகதி சனிக்கிழமை வீடுகள் தோறும் கறுப்புக் கொடிகளை ஏற்றி போராட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

முஸ்லிம் சமூகத்தின் எந்த சம்பந்தமும் இன்றி சஹ்ரான் என்ற கொலைகார கும்பலால் அரங்கேற்றப்பட்ட இந்தத் கொடூர தாக்குதலுக்கு அநியாயமாக குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட முஸ்லிம் சமூகமும் எமது போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தமைக்கு அமைவாக இன்று(21) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகர சபையின் உறுப்பினருமாகிய எம். எம். மஹ்தி அவர்களால் கிண்ணியாவில் கறுப்புக் கொடிகள் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

கறுப்பு நிற ஆடை அணிந்து கொடியேற்றி பின் அவர் வழங்கிய செவ்வியில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகத்திற்கும், அநியாயமாக குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கும், கைது செய்யப்பட்ட தலைமைகளுக்கும் உரிய நீதி கிடைக்கப் பெற வேண்டும். உண்மையான சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். குற்றவாளிகளே தண்டிக்கப் பட வேண்டும். என்ற பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்திற்கு தாமும் ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :