இலங்கையில் வாகனங்களின் விலைகள் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளன.அடுத்த வருடத்திலும் வாகன இறக்குமதிக்கு வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக தடைவிதிக்கப்படவுள்ள நிலையிலேயே வாகனங்களின் விலைகள் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளன.
குறிப்பாக பாவித்த வாகனங்களின் விலைகளும் 100 வீதத்தில் உயர்ந்துள்ளன.
2019ஆம் ஆண்டு பிரீமியோ வாகனமானது தற்போதை விற்பனை விலையாக இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் எக்ஸியோ வாகனம் 120 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாகவுள்ள நிலையில், 15 வருடம் பழைய எக்ஸியோ வாகனத்தின் தற்போதைய விற்பனை விலையாக 65 இலட்சம் குறிக்கப்பட்டுள்ளது.
05 வருடம் பாவித்த விட்ஸ் ரக வாகனத்தின் விற்பனை விலையாக 90 இலட்சம் ரூபா காணப்படுகின்றது.
03 வருடங்கள் பயன்படுத்தப்பட்ட வேகன்ஆர் வாகனத்தின் விற்பனை விலை 65 இலட்சமாக உயர்ந்துள்ளது.
அதேவேளை முச்சக்கர வண்டிகளின் விலைகளும் விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளன.
அதன்படி 03 வருடங்கள் பயன்படுத்தப்பட்ட ஓட்டோ விலை 16 தொடக்கம் 17 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது.
சாதாரண மோட்டார் சைக்களின் விலை 04 இலட்சம் ரூபா வரை அதிகரித்துள்ளதோடு ஸ்கூட்டர் விலையும் இரட்டிப்பாகியுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன
0 comments :
Post a Comment