கல்முனையில் அதிஉச்சப்பதிவாக நேற்று 181 தொற்றுக்கள்! கல்முனை பிராந்திய சுகாதாரசேவைப் பணிப்பாளர் சுகுணன்



வி.ரி.சகாதேவராஜா-
ல்முனைப்பிராந்தியத்தில் கடந்த 24மணிநேரத்தில் அதிகூடிய 181 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. கூடவே 3மரணங்களும் சம்பவித்திருக்கின்றன என கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.

இதுவரைகாலமும் இல்லாத உச்சக்கட்ட பதிவு இது.
கல்முனைப்பிராந்தியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இத்துடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131ஆகிறது.
பிராந்தியத்திலுள்ள 13 சுகாதாரப்பிரிவுகளில் 24மணிநேரத்துள் 181தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதாக கல்முனைப்பிராந்திய
இறுதியாக கல்முனை வடக்க சாய்ந்மருது பிரதேசங்களில் இந்த 3 மரணங்களும் சம்பவித்துள்ளன.

24மணிநேர 181 தொற்றுக்களில் அதிகூடிய தொற்றுக்கள் பொத்துவிலில் 31 என பதியப்பட்டுள்ளது. அடுத்து கல்முனைவடக்கு 27 அக்கரைப்பற்று 21 நிந்தவூர் 20 ஆலையடிவேம்பு 14 காரைதீவு சம்மாந்துறை தலா 11 என என பட்டியல் நீண்டு செல்கிறது.

இவற்றில் கல்முனைப்பிராந்தியத்தில் இதுவரை கொரோனாவால் 131பேர் மரணித்துள்ளனர்.
கல்முனைப்பிராந்தியத்தில் ஏற்பட்ட 131மரணங்களுள் அதிகூடிய 17மரணங்கள் நிந்தவூர் சுகாதாரப் பிரிவிலும் 16மரணங்கள் அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :