மினுவாங்கொடை நிருபர்-
எதிர்வரும் காலத்தில் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே
பொதுப் போக்குவரத்து பஸ்களில் பயணிக்க முடியும். இவ்வாறானதொரு நடைமுறையை உருவாக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தை, இதனூடாக முன்னெடுக்க முடியும் என, சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்குவரத்து பஸ்களில் பயணிப்பதற்கு, தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment