கற்றலை இலகுபடுத்தும் சுருக்கக் குறிப்புகள் வழங்கி வைப்பு





எச்.எம்.எம்.பர்ஸான்-
டந்த வருடம் கொரோனா அசாதாரண காலப்பகுதியின் போது மாணவர்கள் இழந்த கல்வியை ஈடுசெய்யும் வகையிலும் கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலையை உயர்த்துவதற்காகவும் தரம் 7 தொடக்கம் க.பொ.சாதாரண தரம் வரையான மாணவர்களுக்கு சுருக்கக் குறிப்புகளை கிழக்குமாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ளன.

கல்வி வலயங்கள் ஊடாக பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ள இச் சுருக்கக் குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை பாடசாலை நிர்வாகம் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், மாணவர்களுக்கு வழங்கி வைப்பதற்காக வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய ஆசிரியர்களிடம் இச் சுருக்க குறிப்புகளை அதிபர் எம்.ரீ.எம்.பரீட் புதன்கிழமை (28) வழங்கி வைத்தார்.

இதில் பாடசாலை பிரதி அதிபர் எஸ்.பாறூக் கான் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
வழங்கி வைக்கப்பட்டுள்ள இச் சுருக்க குறிப்பில் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், தமிழ் மொழியும் இலக்கியமும், வரலாறு ஆகிய பிரதான பாடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :