யாழ் மாவட்ட இளைஞர் பாராளுமன்ற ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவட்ட இளைஞர் சம்மேளனம் பிரதேச இளைஞர் சம்மேளனங்கள் பொது அமைப்புகள் பங்களிப்புடன் 30 நாட்களில் 1000 குருதி கொடையாளர்களை இணைக்கும் செயற்றிட்டம் நேற்றுமுன்தினம் இருபதாம் நாளாக கரவெட்டி இல் ஆரம்பமானது.
கரவெட்டி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அ.மணாளன் இன் வழிகாட்டலில் கரவெட்டி பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் தாரூஜன் ஏற்பாட்டில் இமையாணன் அ.த.க வித்தியாலயத்தில் இல் ஆரம்பமானது.
இவ் நிகழ்வில் கரவெட்டி பிரதேச செயலாளர் ஈ.தயாரூபன் அவர்களும், யா/இமையாணன் அ.த.க.வி அதிபர் இ.சிவசங்கர் அவர்களும், யாழ் இளைஞர் பாராளுமன்ற ஒன்றியத்தின் ஒருங்கமைப்பாளர் திரு தசீகரன் அவர்களும் தென்மராட்சி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.ஜனார்த்தனன் அவர்களும் தேசிய சம்மேளன பிரதிநிதி உ.நிதர்சன் அவர்களும் கரவெட்டி பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் சி.மயூரன் யாழ்ப்பாண மாவட்ட சம்மேளன உப தலைவர் ச.துவாரகன் அவர்களும் பருத்தித்துரை சம்மேளன தலைவர் ஜானுஷன் அவர்களும் கரவெட்டி பிரதேச சம்மேளன தலைவர் தாரூஜன் அவர்களும் கரவெட்டி பிரதேச சம்மேளன பொருளாலர் பி.பிரவிந்தன் அவர்களும் கரவெட்டி பிரதேச தேசிய சபை லோகரஞ்சன் அவர்களும் யாழ்ப்பாண மாவட்ட சம்மேளன உப செயலாளர் க.கஜன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர் .இன் நிகழ்வில் 47 குருதி கொடையாளர்களால் குருதி வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment