இலங்கை அணியின் மூவருக்கு ஒருவருடப் போட்டித்தடை- 10 மில்லியன் ரூபா அபராதம்



J.f.காமிலா பேகம்-
ங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது, சுகாதார நடைமுறைகளை மீறி, இரவு வேளையில் நடமாடிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு, அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் விளையாட ஒரு வருட கால தடை விதிக்க ஶ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மென்டீஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோருக்கே இந்த போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒவ்வொரு வீரருக்கும் தலா 10 மில்லியன் ரூபா வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
மேலும், உள்நாட்டு போட்டிகளில் விளையாட, குறித்த மூன்று வீரர்களுக்கும் 6 மாத கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :