பலஸ்தீன மக்களுக்காகவும், கொரோனோ ஒழியவும் பெருநாள் தினத்தில் சகலரும் பிரார்த்திப்போம் : வாழ்த்து செய்தியில் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்.நூருள் ஹுதா உமர்-
மழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இறைவனின் கட்டளைகளுக்கு பணிந்து நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை பின்பற்றி இன்று ஈகைத்திருநாளாம் ஈதுல் பித்ர் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எனது இதயபூர்வமான புனித நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் என கல்முனை மாநகரசபை முன்னாள் முதல்வரும், மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் விடுக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த செய்தியில் மேலும்,

இந்நன்னாளை சிறப்பாக்கிக் கொண்டிருக்கும் அதே வேளை நமது நாட்டின் சுபீட்சம், அமைதி, எமது சமூகத்திற்கான பாதுகாப்பு மற்றும் மத நல்லினக்கத்துடனான உறவுகளும் பிற சமூகத்தவர்களுடன் ஏற்படுத்த பட இறைவனை வேண்டிக்கொள்வதோடு இப்புனித நன்னாளில் எமது நாட்டையும் , உலக நாடுகளையும் பீடித்துள்ள கொரோனா என்கின்ற இந்த கொடிய நோய் முற்றாக நீங்கி மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ வல்ல இறைவனிடம் பிராத்திப்பதோடு அரசாங்கத்தினால் அவ்வப்போது விடுக்கப்படும் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து ஏனைய மதத்தவர்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ளுமாறும் வேண்டிக்கொள்கின்றேன்.

மேலும் பலஸ்தீனத்தில் எமது இஸ்லாமிய உறவுகள் யஹூதிகளால் சொல்லொன்னா துயரத்துக்குள் ஆழாகிக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களுடைய வாழ்வில் நிம்மதியையும் சந்தோசத்தையும் வழங்க வேண்டுமென இப்புனித பெருநாள் தினத்தில் இரு கரம் ஏந்தி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்தனை செய்வோமாக! மீண்டும் இப்புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எனது நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அல்ஹம்துலிழ்ழாஹ், ஈத்முபாறக் என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :