சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்திஎம்.எம்.ஜபீர்-
கொரோனா மூன்றாவது அலை முழு உலகையும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கி, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்டுள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டு, அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கு சுகாதார நடைமுறையினை நாம் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்கையில் கடைபிடித்து வாழ்வதற்கு இப்புனித தினத்தில், திடசங்கம் பூணுவோம் என சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்கள் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,

புனித ரமழான் மாதத்தில் இறையச்சத்துடன் நோன்பு நோற்று, ஆன்மீக மேம்பாட்டிக்காக வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட்ட சம்மாந்துறை மக்கள், இப்புனித பெருநாள் தினத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி பேணி பெருநாள் தினத்தில் சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்பு படையினருக்கு கொரோனா தொற்றை ஒழிக்க, நமது சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

கொரோனா வைரசானது மக்களுடைய அன்றாட செயற்பாடுகளை முடக்கி, பெரும் இழப்புக்களையும் ஏற்படுத்தி வருகிறது. அதன் அபாயத்தில் இருந்து எமது நாடும் இன்னும் விடுபடவில்லை. தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் மக்களின் நடமாட்டம் அதிகரித்தமையினால் இன்று தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலை நோன்பு பெருநாள் கொண்டாட்டதில் ஏற்பாடமல் எமது சமூகம் கொரோனா தொற்று நோயினை கட்டுப்படுத்த பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

எமது நாட்டிலே கொரோனாவினை கட்டுப்படுத்துவதற்காக சமய ரீதியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போது, எவ்வாறு அதனை நாம் கடைப்பிடித்து செயற்பட்டமோ, அதேபோன்று எதிர்வரும் காலங்களிலும் செயற்பட வேண்டும். குறித்த கட்டுப்பாடுகளினால் ரமழான் மாதம் நாம் பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் எதிர்நோக்கி இருந்தாலும், அதில் எமக்கு பல படிப்பினைகளும் உள்ளன. இதேபோன்று பல்வேறு வழிகளிலும் இன்று நமது சமூகம் எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிப்பதற்கு சகலரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

எனவே, கொரோனா அச்சம் தொடர்ந்தும் காணப்படுவதால் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு சகலரும் இப்பெருநாள் தினத்தினை தத்தமது வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுவது காலத்தின் தேவையாகும்.

இப்புனித பெருநாள் தினத்தில் வீட்டில் குடும்பத்தோடு பெருநாள் தொழுகையை தொழுமாறும் வெளியில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் சம்மாந்துறை பிரதேசத்தில் பெருநாள் கொண்டத்தில் கொரோனா தொற்று ஏற்படாமல் நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் கொரோனா அச்சுறுத்தலிருந்து சம்மாந்துறை மக்கள் விடுபட்டு, நிம்மதியாக வாழ்வதற்கு சகலரும் இப்புனிதமான தினத்தில் பிரார்த்திப்போம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :