ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யக்கோரி ஓட்டமாவடியில் மக்கள் ஆர்ப்பாட்டம்!எச்.எம்.எம்.பர்ஸான்-
யங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யுமாறு கோரி கல்குடா முஸ்லிம் மக்கள் புதன்கிழமை (5) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டம் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்தவாறு சமூக இடை வெளிகளைப் பேணியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில்,கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சபை உறுப்பினர்கள் உட்பட ஆண்கள், பெண்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த, ஆர்ப்பாட்டத்தில் அரசே ரிசாட்டின் கைது யாரைத் திருப்திபடுத்த? ரிசாட்டை ஏன் கைது செய்தாய்? காரணத்தை வெளிப்படுத்து! போன்ற சுலோகங்களை ஏந்தியவாறும் விடுதலை செய், விடுதலை செய் ரிசாட்டை விடுதலை செய் போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :