சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் தீ :ஆவணங்களுக்கு சேதமில்லை பிரதேச செயலாளர் தெரிவிப்பு!



ஐ.எல்.எம் நாஸிம்-
ம்மாந்துறை பிரதேச செயலகத்தின் நிதிப்பிரிவில் நண்பகல் திடீரென தீ பரவல் சம்பவமொன்று நேற்று (20) இடம்பெற்றது.

தீப்பிடித்த தகவலறிந்த கல்முனை மாநகர தீயணைப்பு படை, மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக ஊழியர்கள் துரிதகதியில் களமிறங்கி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் பாரிய சேதங்களிலிருந்தும் பிரதேச செயலகத்தையும், சுற்றுப்புற சூழலையும் பாதுகாத்தனர் .

இது தொடர்பாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபாவை தொடர்புகொண்டு வினவிய போது
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் ஏற்பட்ட தீ, மின்னொழுக்கினால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் இலங்கை மின்சார சபையில் இது தொடர்பான தொழில் நுட்ப அறிக்கை ஒன்றை கோரியுள்ளதாகவும்,மேலும் எந்த ஒரு ஆவணமும் தீயினால் சேதமடையவில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார்.
இவ் அனர்த்தம் தொடர்பாக அம்பாரை அரசாங்க அதிபர் அவர்களுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
அறையில் உள்ள ஒரு சில தளபாடங்களே சேதமடைந்ததாகவும், இவ் தீயணைப்பை கட்டுப்படுத்த உதவிய சம்மாந்துறை பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும்
கல்முனை மாநகர தீயணைப்பு பிரிவினர் , உட்பட பொது மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :