காரைதீவில் ஒன்றுகூடல் அனைத்திற்கும் தடை! சுகாதாரவைத்திய அதிகாரி தஸ்லிமா அறிவிப்பு.வி.ரி.சகாதேவராஜா-
ண்மைக்காலமாக கொரோனா தீநுண்மியின் தாக்கம் படுவேகமாக அதிகரித்துவருவதனால் காரைதீவுப்பிரதேசத்தில் அனைத்து ஒன்று கூடலுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு காரைதீவு பிரதேச சுகாதாரவைத்தியஅதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் நேற்றைய மக்கள்பிரதிநிதிகளது கூட்டத்தில் தெரிவித்தார்.

ஆலயத்தலைவர்கள் பொதுமக்கள் பிரதிநிதிகள் அடங்கலான பிரதேசகூட்டமொன்று (11) செவ்வாய்க்கிழமை காரைதீவு சுகாதாரவைத்தியஅதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் உதவிபிரதேசசெயலாளர் பி.பார்த்தீபன் தலைமை சுகாதாரபரிசோதகர் சா.வேல்முருகு முப்படையினர் உள்ளிட்டோரும் கலந்துசிறப்பித்தனர்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்:

தற்போதைய கொரொனா வைரஸ் வீரியம்கூடியது. இது அனைத்துதரப்பினரையும் தொற்றிவருகிறது.சுகாதாரவிதிமுறைகளை முறைப்படி பேணாவிட்டால் கடும் இழப்புகளை சந்திக்கநேரிடும்.
மாலை 7மணியுடன் சகல கடைகளும் பூட்டப்படவேண்டும்.பூங்கா கடற்கரை முற்றாகதடைசெய்யப்பட்டுள்ளது. வீதிகளில் கூடிநிற்பதும் தடை. ஆலய பள்ளிவாசல்களும் மக்களுக்கு தடைவிதித்து உங்கள் மதசடங்குகளை நிறைவேற்றலாம்.அங்காடிவியாபாரிகள்விடயத்தில் பிரதேசசபையும் கவனமெடுக்கவேண்டும்.
வெளிமாவட்டங்களிலிருந்துவருவோரை கிராமசேவையாளர்கள் தொடக்கம் மக்கள் பிரதிநிதிகள் இனங்காட்டினால் உதவியாகவிருக்கும். இவ்வாரம் அப்படிவந்த 22பேருக்கு அன்ரிஜன் செய்தபொது யாருக்கும் தொற்றுஇல்லை என்று தெரியவந்தது.
எமது பிரிவில் ஆக 2பேரே இந்த3வது அலையில் தொற்றுக்குள்ளானவர்கள். எனினும் நாமனைவரும் ஒத்துழைத்து மேலும் பரவாமல்தடுக்க களத்திலிறங்கிசெய்ற்படவேண்டுகிறேன். என்றார்.

தலைமையக பொதுச்சுகாதாரப்பரிசோதகர் சா.வேல்முருகு பேசுகையில்:
இதுவரை 3அலைகளிலும் எமது காரைதீவு பிரதேசத்தில் 95பேர் தொற்றுக்குள்ளானபோதிலும் ஆக 2பேரே தற்போது சிகிச்சையிலுள்ளனர்.2075பேருக்கு பிசிஆர் அல்லது அன்ரிஜன் செய்துள்ளோம்.நேற்றும் 20பேருக்கு செய்தோம் சாதகமில்லை. எனவே வெளியிலிருந்த வருவோரை இனங்கண்டுஅறிவியுங்கள்.

சுகாதாரவிதிமுறைகளை மீறினால் கடைகள் இருவாரங்களுக்கு மூடப்படும்.மைதானத்தில்கூடும் இளைஞர்கள் தவிர்க்கவேண்டும். தெருக்களில் கூடிநிற்பதும் தடை. பீச் பார்க் என்பனவும் தடை.மக்கள் ஒத்துழைக்கவேண்டும்.என்றார்.

கூட்டத்தில் பலரும் கருத்துரைவழங்கினர். இறுதியில் பொதுச்சுகாதாரப்பரிசோதகர் பி.ஜெமீல் நன்றியுரையாற்றினர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :