கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்து எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கப்டனுக்கு எதிராக, துறைமுக அதிகார சபையினால் துறைமுகப் பொலிஸாரிடத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அத்துடன் கப்பல் பதிவு செய்திருக்கின்ற நிறுவனத்திற்கு எதிராகவும் முறையிடப்பட்டிருக்கிறது.
குறித்த கப்பல் கடலில் மூழ்கினால் கடல் வளத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படலாம் என்று கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.
இந்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டால் குறித்த கப்பலின் கப்டன் கைது செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :
Post a Comment