இம்முறை வெளியான க.பொ.த.உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் படி மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய மாணவி கலந்தர் பாவா பாத்திமா நுஹா 2ஏ, 1பீ பெறுபேறுகளைப் பெற்று மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தனது ஆரம்பக் கல்வியை பதுரியா நகர் அல் மினா வித்தியாலயத்தில் கற்று பின்னர் இடைநிலைக் கல்வி மற்றும் உயர்தரக் கல்வியை தொடர்ச்சியாக மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் கற்றுள்ளார்.
பதுரியா நகர் இளைஞர் கழக வீதியைச் சேர்ந்த எம்.பீ.கலந்தர் பாவா, எம்.பீ.ஜெமீலா உம்மா தம்பதிகளின் புதல்வியான இவர் புலமைப்பரிசில் பரீட்சையில் 165 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளதுடன், க.பொ.த.சாதாரண தரத்தில் அனைத்துப் பாடத்திலும் ஏ சித்தி பெற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்.
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கும், பிரதேசத்துக்கும் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ள மாணவிக்கு பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குறித்த பிரதேசத்தில் வரலாற்றில் முதன்முதலாக மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர் நுஹா என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment