காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ரசிங்க பிரேமதாஸவின் 28வது ஞாபகார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கொழும்பு-12, ஹல்ஸ்ரப் சுற்று வட்டத்திற்கு அருகில் உள்ள அவரது உருவச் சிலைகருகாமையில் மிக எளிமையான முறையில் இடம் பெற்றது. முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான பிரேமதாஸவின் புதல்வர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொவிட் 19 நோய் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பிரமுகர்களுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நிகழ்வுகள் இடம் பெற்றன.
பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, சரத் பொன்சேகா, முஜிபுர் ரஹ்மான், வடிவேல் சுஸே;, கொழும்பு மாநகர மேயர் றோசி சேனநாயக்க, முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய உள்ளிட்ட ஏனைய பல பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
நான்கு சமயத் தலைவர்களினதும் சமய அனுஷ்டானங்களின் பின்னர் பிரேமதாஸவின் உருவச் சிலைக்கு கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனநாயக்க மலர்மலை அனுவித்ததுடன் திருமதி பிரேமதாஸ, சஜித் பிரேமதாஸ, துலாஞ்சலி பிரேமதாஸ உள்ளிட்ட சகலரும் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தியதுடன் நிகழ்வுகள் நிறைவடைந்ததுடன். மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ நினைவாக ஹல்ஸ்ரப் சுற்றுவட்டத்திற்கருகில் மரக்கன்றும் நடப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :