ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச சபையின் நாற்பதாவது அமர்வு இன்று நடைபெற்றது.

ஏறாவூர் எம்ஜிஏ நாஸர்-

விசாளர் எஸ். சர்வாணந்தன் தலைமையில் நடைபெற்ற இவ்வமர்வில் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பிரதேச சபைக்கு வருமானங்களை கூட்டக்கூடிய பலதிட்டங்கள் இங்கு முன்மொழிவு செய்யப்பட்டன. இதில் குறிப்பாக செங்கலடி நகர பிரதேசத்தில் ஒலி பெருக்கி பொருத்தப்பட்டு அதன்மூலம் வர்த்தக விளம்பரங்கள் செய்து வருமானம் ஈட்டுதல்.

மேலும் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள் அறிவித்தல்கள் மற்றும் விழிப்பூட்டல்கள் போன்ற விடயங்களை அந்த ஒலிபெருக்கி வாயிலாக செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்மொழிந்தனர்.

இதேவேளை ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்பி. ஜெயினுலாப்தீன் தனது கட்சியின் சுழற்சி முறையிலான பதவி ஒப்பந்தத்திற்கிணங்க உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்வதாக விசேட அறிவிப்புச் செய்தார். தனது இறுதி உரையின்போது பல்வேறு தரப்பினருக்கும் நன்றி கூறினார்.

இதற்கிடையே மங்களகம உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து சித்திரைப்புத்தாண்டையொட்டி உடனடியாக குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென தவிசாளர் சர்வானந்தன் அறிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :