கிழக்கு மாகாண முதலைச்சர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா!

நூருல் ஹுதா உமர்-

கிழக்கு மாகாண ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பிலான முதலைச்சர் வேட்பாளராக மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்றங்களுக்கான முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதித்தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா போட்டியிட முன்வரவேண்டும். 

அதுவே எமது அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முஸ்லிம் பிரதேசங்களின் அமைப்பாளர்களின் எதிர்பார்ப்பாகும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச முஸ்லிம் பிரதேசங்களின் அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபை உப தவிசாளருமான ஏ.எம். ஜாஹீர் தெரிவித்தார்.

சாய்ந்தமருது தனியார் விடுதி ஒன்றில் மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்றங்களுக்கான முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதித்தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவுக்கும் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முஸ்லிம் பிரதேசங்களின் அமைப்பாளர்களுக்குமிடையே இடம்பெற்ற சமகால அரசியல் நிலைகள் தொடர்பிலான மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வலுப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு ஒரு முன்மொழிவை முன்வைத்தார். மேலும் அங்கு கருத்து தெரிவித்த உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர்,

முஸ்லிம் அரசியல்வாதிகளில் தைரியமானவராகவும், முஸ்லிங்களின் நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா அவர்கள் அரசியலில் நிறைய அனுபவங்களை கொண்டவர். அவர் கிழக்கில் போட்டியிட்டு கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்றால் முஸ்லிங்களின் தேசிய குரலாக ஒலிர்வார். 

அவரின் வெற்றிக்காக உழைக்க அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள் தயாராக உள்ளார்கள். விரைவில் எமது அரசாங்கம் மாகாண சபையை அறிவித்தால் அதற்காக களப்பணி செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :