இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொதுச்செயலாளர் அனீஸ் அகமது வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த மார்ச் 2020 இல் பொது ஊரடங்கினால் நாடு முழுவதும் சிக்கித் தவித்த மக்களுக்கு உதவிகள் செய்து, கோவிட் நோயாளிகளுக்கு மருத்துவ சேவையை வழங்கி, மேலும் இறந்தவர்களை கண்ணியமாக அடக்கம் செய்து பாப்புலர் ஃப்ரண்ட் தன்னார்வலர்கள் களத்தில் செயலாற்றினர்.
தற்போது நாடு ஒரு ஆபத்தான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதும், நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சுகாதாரப் பணியாளர்கள் சிரமப்படுவதும், இறந்தவர்களின் உடல்கள் திறந்தவெளியில் தகனம் செய்யப்படுவதும் ஆழ்ந்த கவலையும் வேதனையும் அளிக்கிறது. இந்த இக்கட்டான சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் நாட்டு மக்களுடன் உறுதியாக நிற்கும்.
அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கோவிட் நோயாளிகளுக்கு மருத்துவம் உள்ளிட்ட மனிதாபிமான நிவாரணங்களை வழங்குவதற்காக அதிக அளவில் தங்களது உறுப்பினர்களை அணிதிரட்ட பாப்புலர் ஃப்ரண்ட் முடிவு செய்துள்ளது.
எனவே மருத்துவமனைகள், கோவிட் மையங்கள் மற்றும் இறந்தவர்களை அடக்கம் செய்வது உள்ளிட்ட சேவைகளுக்கு தன்னார்வலர்கள் தேவைப்படின் அரசு நிறுவனங்கள் எங்கள் உள்ளூர் நிர்வாகிகளை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம். கோவிட் தொடர்பான நிவாரண சேவைகளில் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது.
மேலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு முழுமையாக ஒத்துழைக்குமாறு நாட்டு மக்கள் அனைவரையும் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது. என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment