புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்கழகம் நடாத்திய கேஎஸ்ஸி பிறிமியர்லீக் (KSC Premier League) மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் விஎஸ்ஸி (விபுலாநந்தா விளையாட்டுக் கழகம்) அணி வெற்றிவாகை சூடியது.
மேற்படி போட்டி கழகத்தலைவர் கே.சசிகரபவான் தலைமையில் காரைதீவு விபுலாநந்தா மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
அணிக்கு 10பேர் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட சிநேகபூர்வ சுற்றுப்போட்டியில் காரைதீவு விளையாட்டுக்கழக அணி காரைதீவு விபுலாநந்தா விளையாட்டுக்கழக அணி காரைதீவு விபுலாநந்தா சனசமுகநிலைய அணி காரைதீவு கிரிக்கட் கழக அணி ஆகிய நான்கு அணிகள் பங்கேற்றன.
கழகப்போசகர்களான வி.இராஜேந்திரன் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்ட இச்சுற்றுப்போட்டியில் பழைய புதிய வீரர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
வருடாவருடம் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் இம்முறை எல்.சுரேஸ் தலைமையிலான விபுலாநந்தா விளையாட்டுக்கழக அணி வெற்றிபெற றன்னஸ்அப் இடத்தை ஏ.அமிர்தானந்தன் தலைமையிலான விபுலாநந்தா சனசமுகநிலைய அணி பெற்றுக்கொண்டது.
போட்டியின்போது அனைத்துவீரர்கள் உறுப்பினர்கள் போசகர்கள் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

0 comments :
Post a Comment