பதிவாளர் மகேந்திரராஜா 75வயதில் ஓய்வு!



காரைதீவு சகா-
ம்பாறை மாவட்டத்தின் காரைதீவுப்பதிவாளர் பிரிவின் பிறப்பு இறப்புப் பதிவாளரும் நிந்தவூர்ப்பற்றுப்பிரிவின் பொதுவிவாகப் பதிவாளருமான தம்பிராஜா மகேந்திரராஜா தனது 75ஆவது வயதில் ஓய்வுபெற்றுள்ளார்.

பதிவாளர் நாயகத்தினால் அம்பாறை மாவட்டச் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் காரைதீவுப்பிரதேச செயலாளர் இவரது ஓய்வு தொடர்பாக அறிவித்துள்ளார்.

06.04.2021 இல் 75ஆவது வயதை பூர்த்திசெய்வதால் இவ் ஓய்வு அறிவிக்கப்படுவதாக பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை காலமும் பதிவாளர் நாயகத்திற்கும் காரைதீவுப்பிரதேசத்திற்கும் ஆற்றிய பெறுமதிமிக்கசேவைக்காகப் நன்றியுடன் பாராட்டுகிறோம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைதீவைச்சேர்ந்த ஓய்வுநிலைஅதிபர் வே.தம்பிராஜா க.தங்கநாயகம் தம்பதிகளின் சிரேஸ்டபுதல்வனான பதிவாளர் தம்பிராஜா மகேந்திரராஜா சிவானந்தாவித்தியாலய பழையமாணவனும் நீண்டகாலம் சிவானந்தா விடுதியின் மேற்பார்வையாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :