எம்மீதான விமர்சனத்தை வரவேற்கிறோம். விமர்சனம் என்பது கட்டணம்
செலுத்தப்படாத விளம்பரம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. 20லட்சருபா
கடனோடு பொறுப்பேற்றசபையை இன்று 46லட்சருபா இருப்போடு வைத்துள்ளோம் .
இவ்வாறு காரைதீவு பிரதேசசபையின் 38ஆவது சபை அமர்விற்கு
தலைமைவகித்துரையாற்றிய தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் பெருமையோடு தெரிவித்தார்.
இந்த 38வது அமர்வு நேற்று சபாமண்டபத்தில் நi;டபெற்றது.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
மயானத்திற்குச் செல்வோரையும் பொலிசார் தலைக்கவசத்திற்காக பிடிக்கின்றனர் அதனை நான்செய்விக்கிறேன் என்றும் இங்கு கூறப்பட்டது. இந்தவாரம் மட்டும் காரைதீவில் 28லட்சருபா களவுபோயிருக்கிறது. ஆங்காங்கே மாவா கஞ்சா சாராயம் விற்கப்படுவதாக தகவல்கள் கிடைக்கின்றன. இந்நிலையில் சட்டத்திற்கு மதிப்பளித்து எமது பாதுகாப்பையும் உறுதிசெய்துகொள்ளவேண்டும்.
ஒரு கட்சியியின் அமைச்சரொருவருக்கு பகிரங்கமாக அமைப்பாளராகவிருக்கும் ஊடகவியலாளரொருவர் எமது சபைக்குவராமலே பொய்யான செய்தியை போட்டு எமக்கு சேறுபூசமுனைந்துள்ளார். இருப்பினும் அவரை மன்னித்துவிட்டோம். ஆனால் ஒருகட்சியின் அமைப்பாளரான அவரை ஊடகவியலாளராக நாம் அனுமதிக்கமுடியாது.
எந்தக்கஸ்டம் வந்தாலும் மக்களுக்கு சேவையாற்றுவதே எனது பணி. உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் எழுத்துமூலம் அறிவித்தால் விடைபெற நான்தயார். உங்களது பிரச்சினைகளை பாரத்தை என்னிடம் கொட்டித்தீர்க்கிறீர்கள்.எனது பாரத்தை யாரிடம் கொட்டுவது?
இந்த 38மாதங்களும் சபையால் எதுவுமே செய்யவில்லையென்று பல உறுப்பினர்களும் ஆதங்கப்பட்டீர்கள்.எனினும் நீரிணைப்பு மின்சாரம் வீதி என பல அபிவிருத்திகள் இடம்பெறாமலில்லை. வெறும்சபையை 20லட்சருபா கடனுடன் என்னிடம் ஒப்படைத்தார்கள். ஆனால் நான் பலஇடங்களுக்கும் சென்று பிச்சைஎடுப்பதுபோன்று நிதியீட்டங்களைப்பெற்று 3வருடநிறைவில் இன்று 46லட்சருபாவை சேமிப்பில் வைத்துள்ளேன்.அந்தளவில் திருப்தி என்றார்.
மாளிகைக்காடு கிழக்கு வாசிகசாலையை உபநூலகமாக தரமுயர்த்தப்படவேண்டும் என்ற உபதவிசாளர் எ.எம்.ஜாகீரின் பிரேரணையில் சட்டச்சிக்கல் இருக்கின்ற காரணத்தினால் தவிசாளரின் பிரேரணையாகக் கொணர்ந்து சபை அங்கீகாரம் பெறப்பட்டது.
அதுதொடர்பிலும் வங்குரோத்து அரசியலுக்கு ஊடவியலாளரொருவர் வக்காலத்து வாங்குகின்ற அநாகரீக செயற்பாட்டினைக்கண்டிப்பதாகவும் மக்கள்சேவையில் அரசியல்செய்வதாகவும் ஸ்ரீல.மு.கா.மூத்தஉறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் குற்றம்சாட்டி உரையாற்றினார்.
பதிலுக்கு உபதவிசாளர் ஜாகீர் நான் அபிவிருத்தியில் ஒருபோதும் அரசியல்
செய்வதில்லை. நான் யாருக்கும் அஞ்சவும்மாட்டேன் யாரிடமும்
கெஞ்சவும்மாட்டேன். மக்களுக்கானசேவையைச் செய்கிறேன் செய்வேன் என்று மேசையில் பலமாகத் தட்டி உரையாற்றினார்.
உறுப்பினர் இஸ்மாயில் பதிலளிக்கயில்: குறித்த நூலகத்தை மண்மூடி அமைத்ததே நான்தான். அரசியல் பேசுங்கள் பொய் பேசாதீர்கள்.
500வாக்குகளைப்பெற்றுவிட்டு கொக்கரிக்காதீர்கள்.நான் முதலாவது தேர்தலில் 4000வாக்குகளைப்பெற்றவன். கூஜாத்தூக்கும் ஊடகவியலாளரை வைத்துக்கொண்டு முகநூலிலும் இணையத்திலும் மற்றவர்களைவ விற்காதீர்கள்.என்றார்.
த.தே.கூ.உறுப்பினர் த.மோகனதாஸ் கூறுகையில் மயானத்திற்குச்செல்வோரையும் பொலிசார் பிடிக்கின்றனர்.கேட்டால் தவிசாளரின் பெயர் அடிபடுகிறது. சிறுவர்பூங்கா இருள்சூழ்ந்துகிடக்கிறது சபைக்கு எதுவுமே செய்யவில்லை.என்றார்.
த.தே.கூ.உறுப்பினர் சி.ஜெயராணி பேசுகையில்: சபைக்குவந்து 38மாதங்களில் மக்களுக்கென ஒருசேவையும் செய்யமுடியவில்லை. ஒரு பல்பைக்கூட போட முடியவில்லை.சபையிலுள்ள ஒரேயொரு பெண்உறுப்பினர் நான். பெண்களுக்கான 25வீதத்தில் 1வீதம்கூட எனக்குத் தரப்படவில்லை.எனது கதை எடுபடுவதில்லை என்றார்.
சுயேச்சை உறுப்பினர் எஸ்.சசிகுமார் பேசுகையில்: ஆயுர்வேத
ஆஸ்பத்திரியினருகாமையிலுள்ள வாசிகசாலையில் நூல்களைப்போடவேண்டும். மக்கள் வாசிப்பார்கள் என்றார்.
உறுப்பினர் பஸ்மீர் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் பலரும் சுருக்கமாக
உரையாற்றினர். ஸ்ரீலசு.கட்சி உறுப்பினர் கே.ஜெயதாசன் சபையில் பேசவில்லை.
0 comments :
Post a Comment