ஏறாவூர் நகர சபையின் தவிசாளரின் வழிகாட்டலின் கீழ் ”சுத்தமான நகரை நோக்கி” எனும் தொனிப்பொருளில் ஏறாவூர் பிரதேசத்தில் வட்டார ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் சிரமதான நிகழ்வுகள் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
ஏறாவூர் 3A மக்காமடி வட்டார சிரமதான நிகழ்வு நேற்று (07) கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் தலைமையில் இடம்பெற்றது.
இச்சிரமதான நிகழ்வின் போது ஏறாவூர் நகர சபை தவிசாளர் எம்.எஸ்.எம்.நழீம், நகர சபை செயலாளர் சியாஹூல் ஹக், நகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்கள், பள்ளிவாசல் நிருவாகத்தினர், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது வீதிகள் மற்றும் வடிகான்கள் சுத்தம் செய்யப்பட்டதுடன், வீட்டுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அவை முறையாக அகற்றப்பட்டது. அத்துடன் பொது இடங்களும் துப்பரவு செய்யப்பட்டது.

0 comments :
Post a Comment