தம்பலகாமம் பிரதேச சபை உறுப்பினர் எம். இமாம்மின் நீண்ட கால வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் ஏற்பாட்டில் தம்பலாகாமம் கோவிலடி சந்தியிலிருந்து மீரா நகர் வரை இவ் காபட் வீதி அமையப்பெறவுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இவ்வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,தெரிவித்த அவர் ஜனாதிபதி அவர்களின் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடைபெற்று வருவதாகவும்,இவ்வீதி அமையப்பெறும் பட்டத்தில் கிண்ணியா கந்தளாய், தம்பலாகாமம்,முள்ளிப்பொத்தானை,மற்றும் வான்எல போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் பெரிதும் நன்மையடைவார்கள் எனவும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment