அரசாங்க அதிபரின் பங்கெடுப்புடன் சம்மாந்துறையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு !

ஐ.எல்.எம். நாஸீம், நூருல் ஹுதா உமர்-

லகெங்கும் ஆண்டுதோறும் மார்ச் 08 ம் திகதி கொண்டாடப்பட்டு வரும் சர்வதேச மகளிர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக அம்பாறை மாவட்ட செயலகம், GAFSO நிறுவனம், இலங்கை பொலிஸ் இணை ஏற்பாட்டில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் மகளிர் தின விழாவும், கௌரவிப்பும் நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்டாட் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

நாடும் தேசமும் உலகமும் அவளே எனும் கருப்பொருளில் கொண்டாடப்பட்ட இந் நிகழ்வில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் , அபிவிருத்தி பெண்கள் உத்தியோகத்தர்கள் , கல்வித்துறையில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் , சுகாதார உத்தியோகத்தர்கள் , மாதர் சங்க அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் என பல்வேறு பிரிவை சேர்ந்த சாதணைப் பெண்கள் கௌரவிக்கப்பட்டனர் .

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல்.கே. பண்டாரநாயக்க அவர்களும், விசேட மற்றும் கௌரவ அதிதிகளாக பிரதேச செயலாளர், வைத்திய அத்தியட்சகர், பொலிஸ் உயரதிகாரிகள், படை அதிகாரிகள், அம்பாறை மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :