சங்குமண்கண்டி மயானத்தில் புத்தர்சிலை அமைக்க முயற்சி! உறுப்பினர் சுபோதரன் தலைமையில் பொதுமக்கள் எதிர்ப்பு.



வி.ரி.சகாதேவராஜா-
பொத்துவில் பிரதேசத்திலுள்ள சங்குமண்கண்டிக்கிராம மயானப்பகுதியில் புத்தர்சிலை அமைக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.

அங்குவந்த பௌத்தபிக்கு தலைமையிலான குழுவினருக்கு பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததையடுத்து அவர்கள் பின்வாங்கினர்.
த.தே.கூட்டமைப்பின் பொத்துவில் பிரதேசசபை உறுப்பினர் த.சுபோதரன் அங்கு மக்களுடன் சமுகமளித்து அங்குவந்த பிக்குமாரிடம் நியாயத்தை எடுத்துரைத்ததும் அவர்கள் ஏற்றுக்கொண்டு பின்வாங்கினர்.
இச்சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்று ள்ளது.
இது தொடர்பில் உறுப்பினர் சுபோதரன் தெரிவிக்கையில்:
பொத்துவில் முகுதுமகாவிகாரை பௌத்தபிக்கு தலைமையிலான குழுவினர் எமது மயானப்பகுதியில் புத்தர்சிலை அமைப்பதற்காக கொங்கிரீட் தூண் முதலான பொருட்களுடன் வந்திறங்கினர்.
இது விடயம் மக்களுக்குத் தெரியவரவே அங்கு மக்கள் ஒன்று கூடினர்.சற்றுநேரத்தில் நிலைமை பதட்டத்திற்குள்ளானது.

நானும் அங்குசென்று அவர்களிடம் இது எமது பிரதேச மயானம்.இதற்குள் புத்தர்சிலை அமைப்பதை எமது மக்கள் விரும்பவில்லை. எனவே முயற்சியைகைவிடுங்கள் என்றேன்.
பதிலுக்கு பிக்குமார் இது வனஇலாகா கட்டைபோட்ட பகுதிதானே நாங்கள் வைப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை ? என்று வாதம் புரிந்தார்கள். மக்களின் காணிகளை வனஇலாகா கட்டைபோட்டுவைத்துள்ளது. அதைவிட இது மக்கள் வாழும்பகுதி. அவர்கள் இங்கு புத்தர்சிலை வருவதை விரும்பவில்லை.எனவே இங்கு பிரச்சினை கிழப்பவேண்டாம் என்றேன்.

அவர்கள் எனது வாதத்தை ஏற்றுக்கொண்டு கொண்டுவந்த பொருட்களுடன் கிளம்பினர். பிரச்சினை தீர்ந்தது. சரி இவ்வளவு பிரச்சினை நடந்தது. இங்குள்ள ஏனைய உறுப்பினாகளின் தலைக்கறுப்பையும் காணவில்லை. தேர்தல் என்றால் மண் மக்கள் என்றுவருவார்கள். இப்படியொரு பிரச்சினை என்றால் என்னைப்போன்றவர்கள்தான் முகம்கொடுக்கவேண்டியுள்ளது என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :