8 மாதர்சங்கங்கள் இணைந்து முப்பெரு மகளிர்தினவிழா.



வி.ரி.சகாதேவராஜா-
ர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாண்டிருப்பு கிராமத்தின் எட்டு மாதர் சங்கங்கள் இணைந்து முப்பெரு மகளிர் தினவிழாவை பாண்டிருப்பில் சிறப்பாக நடாத்தினர்.
முன்னதாக மகளிர்தினத்தையொட்டிய 'ஆகாரா' எனும் தானிய உற்பத்தி விற்பனை நிலையத்தை பாண்டிருப்பு 01 சி மாதர் அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் திறந்துவைத்தார்..

தொடர்ந்து மகளீர் தின முப்பெருநிகழ்வு பாண்டிருப்பு 01 சி மாதர் சங்க பொருளாளர் திருமதி நித்தியகைலேஸ்வரி தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரி.நாகிப் கிராமிய மாதர் அபிவிருத்தி உத்தியோகத்தர் வசந்தினி யோகேஸ்வரன் மற்றும் ஆன்மீக அதிதிகளாக சபாராத்தின குருக்கள் போதகர் எஸ்.கிருபைராஜா உட்பட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம சேவை உத்தியோகத்தர்கள் மாதர் சங்க உறுப்பினர்கள் என பலர் பங்குகொண்டனர்.

இதன்போது எட்டு மாதர் சங்கங்களின் நிதிப்பங்களிப்புடன் பாண்டிப்பில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கும் பணப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
அத்துடன் சுயதொழிலுக்காக தேங்காய் எண்ணை உற்பத்தி செய்யும் இயந்திரமும் அதற்கான உபகரணமும் ஒரு குடும்பத்திற்கு வாழ்வாதார தொழில் முயற்சிக்காக இன்றைய நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :