மினி சூறாவளி - 23 தொடர் மற்றும் தனி குடியிருப்புக்கள் சேதம்

க.கிஷாந்தன்-

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா பட்டல்கலை மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று (07) மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக அந்த தோட்டத்தில் உள்ள 23 தொடர் மற்றும் தனி குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.

கடும் காற்று காரணமாக இந்த தோட்டத்தில் உள்ள 15ம் இலக்க தொடர் குடியிருப்பின் கூரை காற்றினால் அள்ளூண்டு சென்றுள்ளன. இதனால் இந்த குடியிருப்பில் 16 வீடுகளுக்கு மழையால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் கூரைத்தகரங்களும் சேதமடைந்துள்ளன.

இதே நேரம் குறித்த பகுதியில் பாரிய கருப்பன் தைலம் மரம் ஒன்று முறிந்து வீடுகளின் மேல் வீழ்ந்ததன் காரணமாக ஒரு வீட்டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஏனைய இரண்டு வீடுகளின் கூரைத்தகடுகள் சேதமடைந்துள்ளன.

இதே பகுதியில் அமைந்துள்ள மற்றுமொரு தொடர்மாடிக் குடியிருப்பில் ஒரு சில வீடுகளின் கூரை சேதமடைந்துள்ளன.

குறித்த பகுதியில் சுமார் 50 மேற்பட்ட மரங்கள் மினி சூறாவளி காரணமாக முறிந்து வீழ்ந்துள்ளன

மரங்கள் மின் கம்பிகள் மீது வீழ்ந்து மின் கம்பிகள் மற்றும் வயர்கள் சேதமடைந்ததனால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன..

சம்பவ இடத்திற்கு நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே. ரவி அவர்கள் இன்று (08.03.2021) காலை சமூகம் தந்து பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்க இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு  வள அபிவிருத்தி நிதியத்தின் ஊடக செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :