இரண்டாவது நாள் இன்று கொரோனா ஜனாஸாக்கள் 11 நல்லடக்கம் செய்யப்பட்டதுடன் மொத்தம் 20

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் பதினொரு (11) ஜனாஸாக்கள் இன்று சனிக்கிழமை நல்லிரவு வரை அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மற்றும் இன்று சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் மாத்திரம் கொரோனாவினால் மரணித்தவர்களின் இருபது (20) ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று மூலம் மரணித்த ஜனாஸாக்களில் நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இன்று சனிக்கிழமை நிட்டம்புவ பிரதேசத்தினை சேர்ந்த நான்கு பேர் திகாரி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் அநுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் நாரங்கொடயை சேர்ந்த ஒருவர், கொழும்பைச் சேர்ந்த ஒருவர், மாத்தளை அக்குறனை மற்றும் அம்பத்தென் பகுதியை செர்ந்த தலா ஒரவருமாக பதினொரு ஜனாசாக்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 09 ஜனாசாக்களும் , இன்றைய தினத்தில் பதினொரு ஜனாசாக்களையும் சேர்த்து இருபது ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக களத்தில் செயலாற்றும் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :