நான் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டேனா? பச்சைப்பொய்! எழுதிய ஊடகம்..! த.வி.கூட்டனி உறுப்பினர்

காரைதீவு நிருபர் சகா-

ன்னை சபையிலிருந்து வெளியேற்றியதாக ஊடக செய்திகள் வந்ததை பார்க்கும் போது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஊடகதர்மம் இதுதானா என்று கேட்கவேணடியுள்ளது.

ஏன் இப்படியான பொய்யான செய்திகளை எழுப்புகிறார்கள் என எண்ணி கவலையடைந்தேன்.
சபையிலிருந்து நான் வெளியேற்றப்பட வில்லை. எனக்கு முன்னதாகவே சபை அமர்வை ஒத்திவைத்து விட்டு கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் சபையை விட்டு வெளியேறிச் சென்றார். 

அதன் பின்னர் எவ்வளவு நேரம் கழித்தே நான் சபையிலிருந்து வெளியேறினேன் என கல்முனை மாநகர சபை யின் தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர் கதிரமலை செல்வராசா தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை அமர்வில் கடந்த வாரம் நடைபெற்ற குழப்பநிலையை தொடர்ந்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகளுக்கு தமது நிலைப்பாடு தொடர்பில் நேற்று கல்முனையில் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையயில்..

நான் மக்களால் தெரிவுசெய்யப்பட்டுவந்த பிரதிநிதி.மாதாந்தம் நடைபெறும் அமர்வுகளில் நான் கருத்து தெரிவிக்கும் போது என்னை ஏளனமாக பேசுவதும் தரக்குறைவான வார்த்தைகளினால் சபையில் என்னுடைய கௌரவத்தை வழங்காமல் கட்டளையிடுவதுமாக இருக்கும் கல்முனை மாநகர சபை முதல்வர் அதிகார தொனியிலையே நடந்து கொள்கிறார்.

கடந்த சபை அமர்வில் நிதிக்குழு மற்றும் கல்வி கலை கலாச்சார குழு தெரிவின் போது அவரின் நடவடிக்கைகள் பக்கசார்பாக அமைந்தது. அதை பற்றிய நியாயத்தை கேட்ட போது ' டேய் நீயென்ன எல்லாத்துக்கும் கத்திகத்தி படுக்கிற ஒரேயோரே கத்துறாய் என்றதுடன் படைசேவையரை நோக்கி அவர வெளியே எடுத்து போடுங்க' என்றார்.

 உறுப்பினர் கதிரமலை செல்வராசாவுக்கு (எனக்கு) இடைக்கால தடை விதிப்பதாக அறிவித்த மேயர் பின்னர் உடனடியாக என்னை வெளியேற்றுமாறும் கோரினார். அப்போது சக உறுப்பினர்களான ராஜன், மனாப், சப்ராஸ் மன்சூர், அஸீம் ஆகியோர் வெளியேற்ற கூடாது என்று மேயருடன் வாதிட்டதுடன் உறுப்பினர் எம்.எச்.எம்.ஏ. மனாப் சபை அனுமதி பெற்று வெளியேற்றுமாறு கோரினார். அப்போது பொலிசாரை வரவழைத்தனர்.

அப்போது சபைக்குள் வந்த பொலிஸாரையும் உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தி வெளியேற கோரினர். ஆனால் நாங்கள் வெளியேற முன்னர் முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் சபையை விட்டு வெளியேறி சென்றார்.

ஒரு கோடிக்கு மேல் செலவழித்து கிரேன் இயந்திரம் வாங்க போவதாக திட்டம் தீட்டுகிறார்கள். இப்போதைக்கு அத்தியாவசியமான ஒரு தேவையல்ல அது. சபையில் போலியான அல்லது பிழையான அறிக்கைகளை சமர்ப்பித்து ஒப்புதல் கேட்கிறார்கள். ஊழல் நிறைந்து காணப்படுகிறது. அவர்களுக்கு ஜால்றா அடிப்பவர்களை அனுமதித்து இவர்களின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் ஊடகவியலாளர்களை சபையை விட்டு வெளியேறுகிறார்கள். மக்களின் அபிவிருத்திகள் சூறையாடப்படுகிறது இவற்றையெல்லாம் தட்டி கேட்டால் பதிலளிக்க முடியாமல் திணறுவதுடன் அவமானப்படுத்தப்படுகிறோம்.

சபையின் முதல்வருக்கு கைநீட்டி பேசுவதற்கும் கைகாட்டி பேசுவதற்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பது வேடிக்கையே. என்னை இடைநிறுத்தியதாக எவ்வித உத்தியோகபூர்வ எழுத்து மூல அறிவிப்பும் கிடைக்கவில்லை.மேயருக்கு ஜால்ரா அடிப்போர் அடிக்கட்டும். ஆனால் ஊடகங்கள் நடந்ததை எழுதவேண்டும்.அதைவிடுத்து மேயருக்குவால்பிடிக்க நினைத்து ஊடகதர்மத்தை குழிதோண்டிப்புதைக்காதீர்கள். என்றார்.

த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கூறுகையில்:

எமது சபையின் 34வது அமர்வில் யாரும் வெளியேற்றப்படவில்லை. அராஜகமாக மேயர் எமது சக உறுப்பினர் செல்வாவை வெளியேற்ற உத்தவிட்டார். நாம் அதனை முற்றாக எதிர்த்தோம். என்னுடன் சக முஸ்லிம் உறுப்பினர்கள் தோளோடுதோள் கொடுததனர்.


இறுதியில் செல்வாவை வெளியேற்றமுடியாமல் மேயரே வெளியேறினார்.
உண்மை இப்படியிருக்க மேயருக்கு செம்புதூக்ககுகின்ற ஊடகவியாலளர் நடந்ததை பொய்யாக்கி நடக்காததை எழுதியுள்ளார். மேயரின் ஆளான அவரது செய்திகளை ஊடகதலைமைப்பீடம் இனிமேலாவது ஆராய்ந்து அறிந்து போடவேண்டும்.

சட்டப்படி சபையில் தீர்மானமெடுத்தே உறுப்பினரை வெளியேற்றலாம். இங்கு மேயர் தன்னிச்சையாக வெளியேற்றமுற்பட்டமையைத்தான் நாம் எதிர்த்தோம். இதனை மேயருக்கு பட்ஜட்டுக்கு வாக்களித்த எமது சக தமிழ் உறுப்பினர்கள் கைகட்டி வெறுமனே பார்த்துக்கொண்டிருநந்தார்கள். வெட்கக்கேடான விடயம். நாளை அவர்களுக்கு நடந்தால் என்ன நடக்கும்,. உண்மையில் செல்வா வெளியேற்றப்படவில்லை. மாறாக பொலிசாரும் மேயரும் தான் வெளியேற்றப்பட்டனர். என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :