கொவிட் 19 காரணமாக முஸ்லீம்கள் மாத்திரம் மரணிக்க வில்லை தமிழர்களும் மரணிக்கின்றார்கள் கிறிஸ்தவர்கள் பௌத்தர்களும் மரணிக்கின்றார்கள் எனவே பிரதமர் பாராளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியானது அனைவருக்கும் பொதுவானது என்பதையே நாம் கருத வேண்டும்.
எந்தவொரு சந்தரப்பத்திலும் பிரதமர் தனிப்பட்ட முறையில் முஸ்லீம்களுக்கு ஜனாசா விடயம் தொடர்பில் எவ்வித வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை இணைப்பாளர் அஹமட் புர்க்கான் தெரிவித்தார்.
ஜனாசா நல்லடக்கம் தொடர்பில் பிரதமர் தெரிவித்த கருத்து தொடர்பில் கல்முனையில் அமைந்துள்ள மத்திய குழு காரியாலயத்தில் இன்று(14) ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில்
தேர்தல் காலங்கள் வருகின்ற போது முஸ்லீம் சமூகத்தை தலைமை தாங்க கூடியவர்கள் தனிநபர் அபிலாசைகளை நிறைவேற்றி கொள்வதற்காக அல்லது தனிநபர் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக முஸ்லீம் சமூகத்தை பிழையாக வழிநடாத்திய பிரதி உபகாரத்திற்காக தான் இன்று அரசாங்கத்தினால் முஸ்லீம்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்கின்ற பார்வை முஸ்லீம் சமூகத்தின் மத்தியில் இருக்கின்றது.

அதுமாத்திரமன்றி முஸ்லீம்களுக்கு எவ்வாறான வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை பெற்றுக்கொண்டார்களோ அதற்கு எதிர்மாறாக அரசாங்கத்துடன் அவர்கள் சென்று ஆதரவளித்தமையினால் முஸ்லீம்கள் இவர்களிடம் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.
தற்போது பல்வேறு தரப்பினரும் ஜனாசா விடயம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உண்மையில் சர்வதேசத்தின் அழுத்தத்தினால் தான் பாராளுமன்றத்தில் பிரதமர் ஜனாசா அடக்கத்திற்கு அனுமதி வழங்கி உள்ளதாக கருத்துப்பட இன்று சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றது.
உண்மையில் சர்வதேசத்தின் அழுத்தத்தினால் தான் பாராளுமன்றத்தில் பிரதமர் ஜனாசா அடக்கத்திற்கு அனுமதி வழங்கி உள்ளதாக கருத்துப்பட இன்று சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றது.
சர்வதேசத்திற்கு உண்மையில் பயந்து அச்சப்பட்டு ஒரு வாக்குறுதியை கொடுக்கின்ற தலைவராக மஹிந்த ராஜபக்ஸ இருந்ததில்லை.
அவ்வாறு சர்வதேச நாடுகளுக்கு பயந்திருந்தால் அவர் கடந்த இறுதி யுத்தத்தினை வெற்றி கண்டிருக்க முடியாது என்கின்ற உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் முஸ்லீம்களுக்கு மாத்திரம் அல்ல என்பதை சகல தரப்பினரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.உண்மையில் கொவிட் 19 காரணமாக முஸ்லீம்கள் மாத்திரம் மரணிக்க வில்லை.தமிழர்களும் மரணிக்கின்றார்கள்.கிறிஸ்தவர்கள் பௌத்தர்களும் மரணிக்கின்றார்கள்.எனவே பிரதமர் பாராளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியானது அனைவருக்கும் பொதுவானது என்பதையே நாம் கருத வேண்டும்.எந்தவொரு சந்தரப்பத்திலும் பிரதமர் தனிப்பட்ட முறையில் முஸ்லீம்களுக்கு ஜனாசா விடயம் தொடர்பில் எவ்வித வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை என்பதை அரசியல் தலைவர்கள் விளங்கி கொள்ள வேண்டும் என்பதை தெரிளவாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என்றார்
0 comments :
Post a Comment