எச்.எம்.எம்.பர்ஸான்-
இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 இற்கு பதவி உயர்வு பெற்றுள்ள மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானாவை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (13) ரிதிதென்ன இக்றஹ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கோறளைப்பற்று மேற்கு கோட்ட அதிபர்கள் சங்கம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அதிபர் சங்கத்தின் தலைவர் ஏ.எல்.அபுல் ஹஸன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில், அதிபர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு, அதிபர் சங்கத்தினால் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment