வி.ரி.சகாதேவராஜா-
மாணவர்கள் தம் அறிவை வளர்க்க நாம் ஒருபோதும் தடையாயிருக்கமாட்டோம். ஆனால் கொரோனா தடையாயிருக்கலாம். எனவே வகுப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் கட்டாயம் சுகாதார நடைமுறைகளைப் பேணவேண்டும். இன்றேல் தொடங்கிய கையோடு மூடவேண்டிநேரிடும்.
இவ்வாறு காரைதீவு பிரதேச சுகாதார வைத்தியஅதிகாரி டொக்டர் தஸ்லிமா பஷீர் கூறினார்.
காரைதீவுப்பிரதேசத்திற்குட்பட்ட பிரத்தியேகவகுப்புகள் மற்றும் முன்பள்ளிகளை ஆரம்பித்தல் தொடர்பாக அவற்றின் ஆசிரியர்கள் உரிமையாளர்களுக்கான விளக்கமளிக்கும் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காரைதீவு சுகாதாரபணிமனையில் நேற்று நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் சிரேஸ்ட பொதுச்சுகாதாரப்பரிசோதகர் சாமித்தம்பி வேல்முருகு சுகாதாரத்திணைக்கள கொரோனாத்தடுப்பு சுற்றுநிருப விடயங்களை விளக்கமாக எடுத்துரைத்தார்.
அங்கு டொக்டர் தஸ்லிமா மேலும் உரையாற்றுகையில்:
காரைதீவுப்பிரதேசத்தில் கொரோனா ஒழிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையில் முக்கிய கடமை வகிபாகம் எம்மிடம் உள்ளது. எனவே இப்பிரதேசத்துக்குட்பட்ட பாடசாலைகள் முன்பள்ளிகள் பிரத்தியேகவகுப்புகளைக் கண்காணித்து மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை சீராகக்கொண்டு செல்வதில் நாம் கவனமாயிருக்கிறோம்.
கற்றலுக்கு நாம் ஒருபோதும் தடைவிதிக்கப்போவதில்லை. ஆனால் மாணவர் மத்தியில் கொரோனா டெங்கு என்று பிரச்சினை வரும்போது முதலில் நாம் அதனைக்கவனிப்போம்.அது எமது கடமை.
கடந்த மாதம் 03பாடசாலைகளை மாணவர்நலன்கருதி மூடினோம். பின்பு சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறையைப்பேணி இவ்வாரம் அவற்றைத்திறந்தோம். இப்போ பாடசாலைகள் பாதுகாப்பாக உள்ளன. இன்று மக்கள் வங்கியில் 3 ஊழியர்களுக்கு கொரோனா. வங்கி மூடப்பட்டது. சுகாதாரநடைமுறையைப்பேணி திறப்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும். இவை எமக்கான கடமையாகும்.
அதேபோல் சுகாதாரநடைமுறையைப்பேணி பிரத்தியேகவகுப்புகளை நாளை அல்லது மறுதினம் திறக்கலாம். ஆனால் முன்பள்ளிகள் அனைத்தும் எதிர்வரும் 15ஆம் திகதியே திறக்கமுடியும்.
இந்த இரண்டு தரப்பினரும் கைகழுவுதல் சமுகஇடைவெளிபேணுதல் மற்றும் மாஸ்க் அணிதல் போன்ற விடயத்தில் கடுமையாகஇருக்கவேண்டும்.
சகல நிறுவனங்களும் மாணவர் மற்றும் பெற்றோரது பெயர்விபரங்கள் தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய விபரங்களை எம்மிடம் நாளையே ஒப்படைக்கவேண்டும். தினமும் தினவரவு பதியப்படவேண்டும்.
இரண்டு வகுப்புகளிடையே 10நிமிடமாவது வழங்கவேண்டும். மாணவர் அதிகமாகக்கூடுவதற்கு இடமளிக்கவேண்டாம்.
முன்பள்ளிப்பிள்ளைகள் வகுப்பில் மாஸ்க் அணிதல் சிரமமாயிருக்கலாம். அப்படியெனின் கட்டாயம் சமுகஇடைவெளிபேணப்படுதல் அவசியம். மாணவரது பிறந்ததின நிகழ்வு வருடாந்த கலைநிகழ்ச்சி சுற்றுலா வேறுபல நிகழ்ச்சிகள் போன்றவற்றை மறுஅறிவித்தல்வரை சிறிது காலத்திற்கு தவிர்க்கவேண்டும்.
ரியுசன் வகுப்புகளுக்கு வெளிமாவட்ட பிள்ளைகளை அனுமதிக்கவேண்டாம். வெளியூர் பிள்ளைகள் எனின் அவ்வூர் கொரோனா நிலைமையை அவதானித்தே உள்வாங்கவேண்டும்.ஊருக்குள்ளும் தனிமைப்படுத்தல் குடும்பத்திலிருந்துவரும் பிள்ளைகளையோ தொற்றுக்குள்ளானவர்களின் பிள்ளைகளையோ அனுமதிக்கவேண்டாம்.ஏதாவது சுகாதாரப்பிரச்சினை எழுமாயின் எமக்கு அறிவிக்கலாம்.
ஆட்டோவில் கூடியது 3பிள்ளைகள் ஏற்றஅனுமதியுண்டு. வகுப்பிற்குள் உணவுகளை முடியுமானவரை தவிர்க்கவும்.கொவிட்டுடன் வாழ நம்மை நாம் மாற்றிக்கொள்ளவேண்டும். என்றார்.
ஆசிரியர்களிடமிருந்து சுகாதரநடைமுறைபேணல் தொடர்பான உத்தரவாதப்படிவம் பெறப்பட்டது. அதைமீறினால் வகுப்புகள் உடனடியாக மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் பொதுச்சுகாதாரப்பரிசோதகர்களான கே.ஜமீல் எம்.எம்.சப்னூஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

0 comments :
Post a Comment