73வது சுதந்திர அதன் கொண்டாட்ட நிகழ்வுகளின் திருகோணமலை மாவட்ட பிரதான நிகழ்வு இன்று(04) மாவட்ட செயலக வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கபில நுவன் அத்துக்கோரள தலைமையில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
மாவட்ட அபிவிருத்தியை மேம்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தியடைந்த நிலைக்கு கொண்டு செல்ல அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட திடசங்கற்பம் பூணுமாறு இதன்போது அரசாங்க அதிபர் வேண்டிக்கொண்டார்.
கடந்தகால வடுக்களை மறந்து ஒரே நாடு என்றடிப்படையில் நாம் அனைவரும் இணைந்து செயற்படல் மூலம் எமது தாய்நாட்டை வளமான தேசமாக மாற்றியமைக்க முடியும் என்றும் அரசாங்கம் மக்கள் நலனை அடிப்படையாக கொண்டு செயற்பட்டு வருவதாகவும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோராள தெரிவித்தார்.
இதன்போது மாவட்ட செயலக வளாகத்தில் மரநடுகை இடம் பெற்றதுடன் தெரிவு செய்யப்பட்ட சில பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் விதைகளும் மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவின் ஏற்பாட்டில் வழங்கிவைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment