சாமிமலை, ஒல்டன் தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோர் மீது
தாக்குதல் மேற்கொண்டு சானத்தை கரைத்து உற்றிய குற்றச்சாற்றில் ஏழு பெண்கள் , ஆணொருவர் உட்பட எட்டுபேரை எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார் .
18.02.2021. மஸ்கெலியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் நேற்றய தினம் (17/2) ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்ட போதே
நீhவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை தோட்ட முகாமையாளரின் விடுதிக்கு எவ்வித சேதங்களும் மக்களால் ஏற்படுத்தவில்லை எனவும் குறித்த விடுதிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment