கூட்டமாக வந்த ஐந்து யானைகளில் ஒரு யானை உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று (2) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள இறால் பண்ணையை கடந்து மக்கள் குடியிருப்புக்குள் செல்ல முற்பட்ட போதே ஐந்து யானைகளில் ஒன்று இறந்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த யானையை ஆராய்ச்சி செய்வதற்காக இன்று மாலை அம்பாறை மிருக வைத்தியசாலை வைத்திய அதிகாரி எச்.என்.ஏ.சுரன்ஜித் தலைமையிலான குழுவினர் விஜயம் செய்து யானையை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
இவ் மருத்துவப் பரிசோதனையில் யானை மின்சாரம் தாக்கியதன் காரணத்தால் ஏற்பட்ட மாரடைப்பில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் எச்.என்.ஏ.சுரன்ஜித் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment